சசிகலா அரசியலில் களம் காண இருக்கும் 4 வாய்ப்புகள ...என்னென்ன தெரியுமா?
சசிகலா அவர்கள் மீண்டும் அரசியல் பிரவேசம் எடுப்பதற்கு 4 வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வற்றங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஆனாலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், சென்னை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும். தற்போது அவரது விடுதலை அரசியல் வட்டத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் சசிகலா அவர்கள் தற்போது அரசியலுக்கு வருகை தர 4 வாய்ப்புகள் உள்ளன.
அவை என்னென்ன வாய்ப்புகள் என பார்போம். மீண்டும் அ.இ.அ.தி.மு.க –வுடன் இணைவது அதிமுக கட்சியோடு மீண்டும் சசிகலா இனைந்தாள் ஒரு அடிப்படை உறுப்பினராக தான் இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கும். மேலும் சசிகலா அவர்களை அதிமுகவில் நிச்சயம் இணைத்துக் கொள்ள மாட்டோம் என எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது. அஇஅதிமுக மற்றும் அமமுக இரண்டு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது: தினகரன் அவர்களது அமமுக கட்சியை அதிமுக கட்சியோடு இணைத்து செயல்பட வேண்டும். இதற்கு காரணமாக இரு கட்சியிலும் பொதுவாக ஆதரவளிக்கும் நபர்கள் அதிகம் இருப்பது தான்.
ஆனால் அதிமுக கட்சி அமமுக கட்சியோடு கூட்டணி வைப்பது சந்தேகம் தான். அமமுக-வில் இணைந்து மூன்றாவது முன்னணியில் செல்வது : அமமுக கட்சியில் தனித்து போட்டியிட்டு மூன்றவது அணியை அமைத்து செல்வது தான் 3வைத்து வாய்ப்பாகும். இதற்கும் சிறிய வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் கமல் ஹாசன் அவர்களின் மக்கள் நீதிமய்யம் தொடங்கிய முதல் வருடத்தில் 3 வைத்து பெரும் கட்சியாக காட்சியளித்தது.
சசிகலா அரசியலில் இருந்து வெளியேறுவது:
ரஜினிகாந்த அவர்கள் அரசியலுக்கு வருகை தருவதாக தெரிவித்து. பின்ன உடல் நிலைக் காரணமாக அரசியலில் இருந்து விலகினார். அதுபோல தற்போது சசிகலாவுக்கு உடல் நிலைப் பிரச்சனை இருப்பதால் அவரும் அரசியலில் இருந்த விலகுவது 4 வது வாய்ப்பாகும்.