அரசியலில் குதித்த பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

Jon
in கிரிக்கெட்Report this article
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி இன்று மம்தா பேனர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். தமிழகத்தோடு சேர்த்து மேற்கு வங்கத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் மம்தா பேனர்ஜி இந்தத் தேர்தலை வாழ்வா, சாவா போராட்டமாக பார்க்கிறார்.
புதுச்சேரியைப் போலவே திரிணாமுல் காங்கிரஸில் உள்ள அதிருப்தியாளர்களை பாஜக தன்வசம் இணைத்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தை பூர்விகமாக கொண்ட கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி இன்று திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தபோதே விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மனோஜ் திவாரி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அரசியல் இணையப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.