அரசியல் கோமாளி எடப்பாடி பழனிசாமி - புகழேந்தி கடும் விமர்சனம்
சேலம் எடப்பாடி பழனிசாமி கோட்டை என்பது தற்போது ஓட்டையாக உள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அரசியல் கோமாளி
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரும் தனித்தனியாக செயல்பட்டு வருவதோடு, மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்ல பழனிசாமிக்கு தகுதி இல்லை.

ஓபிஎஸ் க்கு மட்டும் தான் தகுதி உள்ளது. தென்தமிழகத்திற்கு செல்ல பழனிசாமிக்கு பயம். பிரதமர் பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு பசும்பொன் செல்ல நினைக்கிறார்; பழனிசாமி பொதுச் செயலாளர் ஆக முடியாது.
அரசியல் கோமாளி எடப்பாடி பழனிசாமி. அதிமுக-வை ஓபிஎஸ் மட்டுமே வளர்க்க முடியும்; சேலம் எடப்பாடி பழனிசாமி கோட்டை என்பது தற்போது ஓட்டையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.