கொரோனா இரண்டாவது அலைக்கு காரணம் அரசியல் பிரச்சாரங்களா?
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களும் ஒரு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதன் வாக்குப்பதிவுகள் காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 7 மணி வரையில் நடைபெற்றன.
வாக்குப்பதிவுகளின் முடிவில் தமிழகத்தில் மொத்தம் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனிடையே தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் தான் கொரோனாவின் இரண்டாவது அலையின் வேகமெடுக்கவும் தொடங்கியது. கடந்தாண்டு இறுதியில் இருந்து கொரோனாவின் தாக்கம் மிகவும் குறைந்து வந்த நிலையில். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்க தொடங்கியது முதல் மெல்ல மெல்ல வேகமெடுத்தன.
இதற்கு மக்களின் அலட்சியம் ஒரு காரணம் என்றாலும்,சமூக இடைவெளியைக் கடைபிடிக்க அரசு போட்டிருந்த உத்தரவை அவர்களே மறந்துபோய் தேர்தல் பிரச்சாரத்தை கூட்டம் கூட்டமாக நடத்தியுள்ளனர். இதில் சமூக இடைவெளியும் இல்லை,பெரும்பாலானோர் முகக்கவசமும் அணியவில்லை.
இந்த கூட்டத்தில் யாரேனும் கொரோனா பாதிக்கப்பட்டிருந்த கூட்டத்தோடு கூட்டமாக பரப்பி இருக்கவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் கொரோனா தோற்று மீண்டும் வேகமெடுத்ததுக்கு தேர்தல் பிரச்சாரமும் ஒரு காரணம் என சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.