தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

By Fathima Jun 28, 2026 04:35 AM GMT
Report

தமிழகம் முழுவதும் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் போலியோவை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி இந்த ஆண்டுக்கான முகாம் தமிழகத்தில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.


காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறும் முகாமில் 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.

இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பயணத்தில் இருக்கும் குழந்தைகளுக்காக பொதுபோக்குவரத்து துறைகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் | Polio Drops In Tamilnadu