போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 இடங்களில் இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
போலியோ சொட்டு மருந்து விடப்படும் குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
அவர், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர் போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்னன் உள்ளிட்டோர் பங்கேற்றன.