கொள்கை உறுதியோடு பயணிக்கும் தி.மு.க இது மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாது : அமைச்சர் அன்பில் மகேஷ்

DMK Anbil Mahesh Poyyamozhi
By Irumporai Jun 15, 2023 02:29 AM GMT
Report

கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் என்றும் ஜனநாயக விரோதிகளை எதிர்ப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 செந்தில் பாலாஜி கைது

தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு , தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

கொள்கை உறுதியோடு பயணிக்கும் தி.மு.க இது மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாது : அமைச்சர் அன்பில் மகேஷ் | Policy Determination Minister Anbil Mahesh

அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார்.

இதனை தொடர்ந்து, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அமைச்சர் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளின் மூலமாக தனக்கு எதிரான முற்போக்கு அரசியல் சக்திகளை அச்சுறுத்த பா.ஜ.க முயற்சிக்கின்றது.

கொள்கை உறுதியோடு பயணிக்கும் தி.மு.க இது போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாது! மாண்புமிகு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் என்றும் ஜனநாயக விரோதிகளை எதிர்ப்போம் என பதிவிட்டுள்ளார்.