ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : டிஜிபி எச்சரிக்கை
By Irumporai
ஹெல்மட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
ஹெல்மட்
தமிழகத்தில் தற்போது இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக, ஹெல்மட் அணியவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்லும் காவல்துறையினர் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவலர்கள் ஹெல்மட் அணியவேண்டும்
மேலும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பணிக்கு செல்லும் போலீஸாரின் வாகனத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், போலீசார் அடையாளத்தை காரணமாக கூறி வாக்குவாதம் செய்தால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.