ஹெல்மட் போட்டு போங்க சார்...அட்வைஸ் கொடுத்த இளைஞருடன் போலீஸ்காரர் வாக்குவாதம்
ஹெல்மட் போட்டு செல்லுங்கள் என அறிவுரை வழங்கிய இளைஞருடன் போலீஸ்காரர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
அட்வைஸ் கொடுத்த இளைஞர்
இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் தலைகவசம் (ஹெல்மட் ) அணிந்து செல்ல வேண்டும் என்பது சட்டம்.
இதை செய்யாத இருசக்கர வாகன ஓட்டிகளை சாலைகளில் நிறுத்தி அவப்போது அபராதம் செலுத்தி வருகின்றனர் போலீசார்.
இந்த நிலையில் சென்னை நியு ஆவடி சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சக வாகன ஓட்டியான போலீஸ்காரர் ஒருவரிடம் ஹெல்மட் அணியுமாறு கூறியுள்ளார்.
அட்வைஸ் செய்த இளைஞரால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் இளைஞரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“சொன்னது தப்பு தாண்டா போ”
வாக்குவாதத்தின் போது இளைஞர் உங்கள் நல்லதுக்கு தான் சொன்னேன் என கூறவே, போலீஸ்காரர் நான் தான் பாத்துக்குறேன்னு சொல்றேன்ல உனக்கு எதும் பிரச்சனையா. நான் ஹெல்மட் போடுவேன் போட மாட்டேன் உனக்கு என்ன பிரச்சனை? நீ ஹெல்மட் போட சொன்னது தப்பு தாண்டா போ என கூறினார்.
தற்போது போலீஸ்காரரின் வாக்குவாத வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மற்றவர்களுக்கு தலைகவசம் குறித்து அறிவுரை வழங்க வேண்டிய போலீஸ்காரரே இப்படி பேசலாமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நா Helmet போடலனா உனக்கு எதாவது பிரட்சனையா? Helmet போட சொன்னத்திற்கு மிரட்டல் விடுத்த காவலர் #Chennai |#Police |#helmet pic.twitter.com/1MmEnd9hwf
— Tamil Diary (@TamildiaryIn) October 7, 2022