மோப்ப நாய்க்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய காவல்துறையினர்

By Thahir Jun 22, 2021 05:38 AM GMT
Report

தஞ்சை மாவட்டத்தில் குற்றங்களை துப்பறிவதில் காவல்துறையினருக்கு உற்றத்துணையாக விளங்கி உயிரிழந்த ராஜராஜன் என்ற மோப்பநாயின் உடல் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

மோப்ப நாய்க்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்திய காவல்துறையினர் | Policedog Tnpolice Tamilnadu

வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த ராஜராஜன் மோப்ப நாயின் உடல் துப்பறிவு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த ராஜராஜன் மோப்பநாய் தஞ்சை மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.