மருமகளை நிர்வாணமாக்கி தாக்கிய மாமியாருக்கு போலீஸ் வலைவீச்சு
ஒடிசாவில், கேட்ட வரதட்சணை கொடுக்காத மருமகளை நிர்வாணமாக்கி, தாக்குதல் நடத்திய மாமியாரை, போலீசார் தேடுகின்றனர். ஒடிசாவில், உள்ள கேந்திரபாரா மாவட்டம் கோரக் கிராமத்தில், அந்த கிராமத்தில் மருமகளாக வாக்கப்பட்டு போன 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது மாமியாரின் வரதட்சணை கொடுமையால் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்.
ஒரு கட்டத்தில் இந்த கொடுமை உச்சம் தொட, தந்து மருமகள் என்றும் கூட பாராமல் வீட்டிற்குள் மருமகளை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் வசிப்பவர்கள் மீட்டுள்ளனர். மேலும் மருமகளை நிர்வாணமாக்கி மாமியார் தாக்கும்சம்பவத்தைக் கண்டா மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் பெண் வீட்டாருக்கு தெரியவர அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார் மேலும் போலீசில் புகாரும் செய்தனர்.
அதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான மாமியாரை தேடி வருகின்றனர்.