போலீஸ் என்ன டார்ச்சர் பன்னுராங்க - நீதிபதி முன் கதறிய மீரா மிதுன்!
பட்டியல் இன மக்களை அவதூறாக பேசியதாக மீரா மிதுன் மேலும் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை கடந்த ஆண்டு ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல் , ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதற்கான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் சென்னை எழும்பூர் போலீசார் மேலும் ஒரு வழக்கில் மீரா மிதுனை கைதுசெய்துள்ளனர் . கடந்த ஆண்டு எழும்பூர் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார் மீரா மிதுன்.
அப்போது அவர் பிரஸ்மீட் நடத்தக்கூடாது என ஹோட்டல் நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் ஓட்டல் மேலாளரை மிரட்டியுள்ளார். இதுதொடர்பான வழக்கில் மீரா மிதுன் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது வழக்கு தொடர்பாக போலீசார் அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் 14வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன் நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் கதறி அழுததாக கூறப்படுகிறது.
காவல் துறையினர் தன் மீது வழக்குகள் போட்டும், டார்ச்சர் செய்தும் தற்கொலைக்கு தூண்டுவதாக மீரா மிதுன் வாதம் செய்துள்ளார். எழும்பூர் காவல்துறையினர் இந்த வழக்குகள் குறித்து முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் தன் சார்பாக வாதாட வழக்கறிஞர் வரவில்லை எனவும் மீரா மிதுன் குற்றச்சாட்டியுள்ளார்.