பங்களா சாவி யாருகிட்ட இருக்கும் ? சசிகலாவிடம் சரமாரி கேள்வி எழுப்பிய தனிப்படை போலீசார்

V. K. Sasikala Kodanad Case
By Irumporai Apr 21, 2022 09:49 AM GMT
Report

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார், சசிகலாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சசிகலாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் உறவினரான விவேக் மற்றும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றது.

பங்களா சாவி யாருகிட்ட இருக்கும் ? சசிகலாவிடம்  சரமாரி  கேள்வி எழுப்பிய தனிப்படை போலீசார் | Police To Question Sasikala Kodanad Murder

அவர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், பல்வேறு கேள்விகளை தனிப்படை போலீசார் சசிகலாவிடம் எழுப்பினர். சிகலாவிடம், எழுப்பப்பட்ட கேள்விகள்: கோடநாடு பங்களாவின் சாவி யாரிடம் இருக்கும்?

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது இருந்த பணியாளர்கள் யார்? யார்? மேலும், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது? ஓட்டுநர் கனகராஜ் போயஸ் தோட்டத்தில் பணியாற்றினாரா?

ஜெயலலிதா அறையிலும், உங்கள் அறையிலும் இருந்த ஆவணங்கள் என்னென்ன?

சம்பவத்திற்கு பிறகு கோடநாடு பங்களாவுக்கு நேரில் சென்றீர்களா?

தற்கொலை செய்து கொண்ட தினேஷ் கோடநாடு பங்களாவில் என்னவாக இருந்தார்? அவரை தெரியுமா?

இந்த கேள்விகளை சசிகலாவிடம் தனிப்படை போலீசார் எழுப்பினர்