பண மோசடி விவகாரம் - நடிகை நமீதாவின் கணவருக்கு போலீசார் சம்மன்!

Namitha Tamil nadu
By Jiyath Nov 14, 2023 10:06 AM GMT
Report

பண மோசடி விவகாரம் தொடர்பாக நடிகை நமீதாவின் கணவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

புரொமோஷன் கவுன்சிலிங்

கடந்த சில நாட்கள் முன்பு சேலத்தில் MSME புரொமோஷன் கவுன்சிலிங் என்ற அமைப்பின் பெயரில் நிறுவன உறுப்பினர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பண மோசடி விவகாரம் - நடிகை நமீதாவின் கணவருக்கு போலீசார் சம்மன்! | Police Summons To Actress Namitha S Husband

இந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் தேசிய தலைவரான முத்துராமன் (மதுரை மாவட்டம்), தேசிய செயலாளரான துஷ்யந்த் யாதவ் (பஞ்சாப் மாநிலம்) மற்றும் தமிழகத்தின் தலைவராக இருந்த நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜகவை சேர்ந்த நமீதாவும் கலந்து கொண்டார். பின்னர் மத்திய அரசு கடன் விவகாரம் குறித்து சிறு, குறு தொழில் நிர்வாகிகளுடன் பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சி பேனரில் இந்திய அரசின் அசோக முத்திரை பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும், கவுன்சிலிங் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் இந்திய அரசின் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தியதோடு தேசிய கொடியை வாகனத்தில் பொருத்தியிருந்த குறித்து புகார் எழுந்தது.

மோசடி புகார்

மேலும் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோர் தன்னிடம் ரூ.41 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக, சேலம் மாவட்டத்த்தை சேர்ந்த கோபால் சாமி என்பவர் அவர்கள் மீது புகார் அளித்தார்.

பண மோசடி விவகாரம் - நடிகை நமீதாவின் கணவருக்கு போலீசார் சம்மன்! | Police Summons To Actress Namitha S Husband

இதன் பேரில் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அந்த அமைப்பின் தமிழக தலைவர் பதவியை வாங்குவதற்காக நடிகை நமீதாவின் கணவர் ரூ.4 கோடி வரை பணம் கொடுத்ததாக கோபால் சாமி என்பவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில் நமீதாவின் கணவர் மற்றும் முத்துராமின் உதவியாளர் மஞ்சுநாத் ஆகிய இருவரும் இன்று இரவு ஆஜராகும் படி சூரமங்கலம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. இது தொடர்பாக காவல் துறையின் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.