தடையினை மீறி சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள் : எச்சரித்து அனுப்பிய காவல்துறை

By Irumporai Dec 10, 2022 12:55 PM GMT
Report

மெரினா  கடற்கரைக்கு தடையை மீறி வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினார்.

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையினை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது கரையோரத்தில் பல்வேறு பாதிப்புகள்ஏற்பட்டது. அதனை சரி செய்ய மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தடையினை மீறி சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள் : எச்சரித்து அனுப்பிய காவல்துறை | Police Stopped Ban On The Chennai Beach

இதனால், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கடற்கரைக்கு யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக பட்டினமருதூர், மெரினா பகுதி கடற்கரையில் பொதுமக்கள் யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

எச்சரித்து அனுப்பிய காவல்துறை

இருந்தாலும், மக்கள் பட்டினமருதூர் கடற்கரைக்கு மக்கள் வந்துகொண்டிருந்தனர். இதனால் காவல்துறையினரின் மீட்பு பணிகள் தாமதமாகி இருந்தன. மேலும் தடை மீறி கடற்கரைக்கு வந்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

எச்சரிக்கையை மீறி வாகனத்தில் வந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் புகைப்படம் எடுத்தனர். அவர்கள் மீது அடுத்து விதியை மீறியதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.