போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

wedding against parents
By Jon Feb 13, 2021 05:28 PM GMT
Report

தமிழகத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி செட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராமராஜின் மகன் ஜீவா (வயது 21), பொக்லைன் எந்திர டிரைவராக இருக்கிறார்.

இவருக்கும், சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர்பாளையம் நடுதெருவை சேர்ந்த சின்னத்துரையின் மகள் பாக்கியலட்சுமி (19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதுநாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கே நம்மை பிரித்து விடுவார்களோ என்று பயந்த இருவரும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இருவரும் பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார், இருவரின் பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து, அவர்களுடன் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்.