இம்ரான் கான் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்த போலீஸார் : பரபரப்பில் பாகிஸ்

Pakistan Imran Khan
By Irumporai Mar 19, 2023 09:09 AM GMT
Report

இம்ரான் கானின் வீட்டை உடைத்து போலீசார் நுழைந்ததால் பரபரப்பு நிலவுகின்றது.

இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான ஊழல் வழக்கில், நெற்று ஆஜராக சென்று கொண்டிருந்த போது, போலீசார் இம்ரான் கான் வீட்டின் கதவை அடித்து நொறுக்கி அதிரடியாக உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து, இம்ரான்கானை கைது செய்வதை எதிர்த்து அவரின் ஆதரவாளர்கள் கோஷமிட்டு இருக்கும்பொழுது, போலீசாருக்கும் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

வீடு தாக்குதல் 

மேலும், இம்ரான் கானின் மனைவி வீட்டில் இருந்தபோது, போலீசார் தடுப்புகளை அகற்றிவிட்டு அவரது வீட்டிற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, போலீசார் ஆதரவாளர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், குறைந்தது 10 பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும், 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.