நிலத்தை கையகப்படுத்தும் அரசாங்கம் : பெண் விவசாயியை அறைந்த போலீஸ் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Irumporai May 18, 2023 11:53 AM GMT
Report

பஞ்சாபில் நடந்த போராட்டத்தின் போது விவசாயியை காவல்துறை அதிகாரி அறைந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பஞ்சாப்பில் போராட்டம் 

டெல்லியில் இருந்து கத்ரா இடையேயான தேசிய நெடுஞ்சாலை சுமார் ரூ.39,500 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது. இந்த நெடுஞ்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் விவாசாயிகள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 கன்னத்தில் அறைந்த காவலர்

இந்த நிலையில், நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் விவசாயியை பஞ்சாப் போலீஸ் அதிகாரி ஒருவர் அறைந்துள்ளார். இதன்பின், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.பி தெரிவித்துள்ளார். தற்பொழுது, போலீஸ் அதிகாரி பெண் விவசாயியை அறைந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விரைவுச் சாலை, டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் பயண நேரத்தை நான்கரை மணி நேரமாகவும், தேசிய தலைநகர் மற்றும் கத்ராவிற்கும் இடையிலான பயண நேரம் ஆறரை மணி நேரமாகவும் குறைக்கும் என கூறப்படுகின்றது.