அடுத்தவர் மனைவியுடன் தகாத உறவு : போலீஸ் எஸ்ஐக்கு விழுந்தது தர்மஅடி

illegalaffair policesisuspended
By Petchi Avudaiappan Nov 27, 2021 06:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

தெலுங்கானாவில் அடுத்தவர் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த போலீஸ் எஸ்ஐயை அப்பெண்ணின் கணவர் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி நகர புறநகர் காவல் நிலைய எஸ்ஐ ஷேக் சபீக்கு அதே பகுதியில் உள்ள கொத்தகோட்டையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்தது. 

இதுபற்றி தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் மூலம் தெரிந்து கொண்ட அந்த பெண்ணின் கணவர் கடும் ஆத்திரமடைந்தார். இருவரையும் கையும் களவுமாக பிடிக்க எண்ணிய அவர் திட்டம் ஒன்றை வகுத்தார். 

அதன்படி அப்பெண்ணின் கணவர் வேலை விஷயமாக வெளியூருக்கு செல்கிறேன் என்று கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். கிடைத்தது சந்தர்ப்பம் என்று கருதிய அவருடைய மனைவி உடனடியாக தன்னுடைய கள்ளக்காதலன் எஸ்ஐ ஷேக் சபீக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தார்.

அருகிலேயே வேறொரு வீட்டில் மறைந்து இவற்றை கவனித்து கொண்டிருந்த பெண்ணின் கணவர் எஸ்ஐ ஷேக் சபீ தன்னுடைய வீட்டுக்குள் சென்று மனைவியுடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் சென்று கதவை தட்டி திறக்க செய்து எஸ்ஐ ஷேக் சபீயை கடுமையாக தாக்கினார். குறுக்கிட்ட மனைவிக்கும் தர்ம அடி விழுந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று தர்ம அடி வாங்கி படுகாயமடைந்த எஸ்ஐயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.