எல்லா போலீஸூம் கெட்டவர்கள் அல்ல... சிறுவனுக்காக செய்த செயல் : வைரலாகும் வீடியோ

Viral Video Tamil Nadu Police
By Petchi Avudaiappan Apr 30, 2022 08:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

வாணியம்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிறுவனின் ஆசையை  நிறைவேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இன்றளவும் காவல்துறை என்றாலே அதன் மீது மக்களின் மத்தியில் இருக்கும் அச்ச உணர்வும் மோசமான மனநிலையும் இன்னும் மாறவில்லை. காவல்துறை உங்கள் நண்பன் என ஒரு நட்புணர்வு ஏற்பட கூறினாலும் ஒரு சிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பழிச்சொல்லாக மாறி விடுகிறது. 

ஆனாலும் இந்த துறையில் நல்ல, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்ககூடிய, மரியாதை கொடுக்கக்கூடிய, உதவி செய்யக்கூடிய போலீஸ் அதிகாரிகளும் உள்ளனர். அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ராஜா என்ற அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது தந்தையோடு வந்த இஸ்லாமிய சிறுவனிடம் கைகொடுத்து பேசினார்.

அப்போது அந்த சிறுவன் போலீஸ் தொப்பி அணிந்து பைக்கில் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காத உதவி ஆய்வாளர் ராஜா சிறுவன் அணிந்திருந்த குல்லாவுக்கு மேல் தனது போலீஸ் தொப்பியை மாட்டி, பைக்கில் தன் முன்பாக அமரவைத்து சல்யூட் அடிக்க சொல்கிறார்.

அந்த சிறுவனும் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே சல்யூட் அடிக்க பைக் புறப்பட்டது. இந்த வீடியோவை செங்கல்பட்டு மாவமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுனா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ள நிலையில், அது வைரலாகியுள்ளது.