உதயசூரியன் புடவை அணிந்துவந்த பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ் - சிவகாசியில் பரபரப்பு
dmk
urbanlocalbodyelection2022
udayasooriyan
By Petchi Avudaiappan
சிவகாசி வாக்களிக்க வந்த பெண்கள் உதயசூரியன் சின்னம் பொறித்த புடவை அணிந்து வந்ததால் அவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பிய சம்ப. வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதல் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
இதனிடையே சிவகாசியில் 26வது வார்டு பகுதியில் வாக்கு அளிக்க வந்த பெண்கள், உதயசூரியன் சின்னம் பொறிந்த புடவை அணிந்து வந்திருந்தனர். இதனையடுத்து அந்த பெண்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.