திருடச் சென்ற இடத்தில் செல்போனிற்கு சார்ஜ் - மறந்ததால் வசமாக மாட்டிய திருடன்
திருடன் தனது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு மறந்துவிட்டு சென்று மாட்டியுள்ளார்.
திருட வந்த இளைஞர்
நாமக்கல், குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன் பட்டியில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் திருடுவதற்கு வந்துள்ளார். உணவகத்திற்கு சம்பந்தம் இல்லாத ஆள் ஒருவர் உணவகத்தில் இருந்து வெளியே வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் உணவகத்தின் உரிமையாளருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து வந்த உரிமையாளர் தனது கடையில் இருந்த பணம் திருடப்பட்டதை அறிந்து கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது கையில் டார்ச் லைட்டுடன் திருட வந்த இளைஞர் தன் செல்போனை அங்கு சார்ஜில் போட்டுவிட்டு சாவகாசமாக கல்லாவில் இருந்த
செல்போனிற்கு சார்ஜ்
20,000 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தையும் திருட முயன்றுள்ளார். டையில் வேறு ஏதேனும் பொருட்கள் திருடு போயுள்ளதா என கடையின் உறிமையாளர் சரிபார்த்த பொழுது சார்ஜில் போட்டு வைத்த செல்போனை திருடன் எடுக்காமல் மறந்து வைத்துவிட்டு சென்றது தெரிய வந்தது.
கடையின் உரிமையாளர் இது குறித்து காவல் துறையிடம் தகவலை தெரிவித்தார். தகவல் அறிந்து உணவகத்திற்கு வந்த காவல் துறையினர் செல்போனை வைத்து விசாரித்து வருகின்றனர்.