RSS பேரணிக்கு தடை - நீதிமன்றத்தில் காவல்துறை மறு சீராய்வு மனு

Tamil Nadu Police Madras High Court
By Thahir Sep 29, 2022 09:32 AM GMT
Report

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் RSS பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

அனுமதி மறுப்பு 

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் RSS சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது.

RSS பேரணிக்கு தடை - நீதிமன்றத்தில் காவல்துறை மறு சீராய்வு மனு | Police Revision Petition In Court

காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி பேரணி நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து RSS மாவட்ட நிர்வாகிகள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் RSS பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மறு சீராய்வு மனு தாக்கல் 

அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை RSS அமைப்பு நாடியுள்ளது. இது தொடர்பாக RSS சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

RSS பேரணிக்கு தடை - நீதிமன்றத்தில் காவல்துறை மறு சீராய்வு மனு | Police Revision Petition In Court

அதேநேரம் தற்பொழுது தமிழக அரசு சார்பில் தமிழக காவல்துறையும் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளதால் நீதிமன்றம் RSS பேரணிக்கு அனுமதி அளித்தது தொடர்பான உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.