தமிழக எல்லை தாண்டும் வாகன ஓட்டிகள் - ரோஜா கொடுத்து திருப்பி அனுப்பும் போலிஸார்
முழு ஊரடங்கில் தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு ரோஜா மலரை வழங்கி விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய கர்நாடக மாநில போலிசார்.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளநிலையில் தமிழகத்தின் மாநில எல்லையான ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குறுக்கு வழிகள் மூலமாக கர்நாடகாவிற்கு சென்றபோது பல்லூர் என்னுமிடத்தில் போலிசார் தடியடி நடத்தினர்.
தமிழகத்திலிருந்து கர்நாடகாவிற்கு வருவோர் மீது தடியடி நடத்தாமல், விழிப்புணர்வு ஏற்ப்படுத்துமாறு போலிசாருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்தநிலையில், ஒசூர் பகுதிகளிலிருந்து கர்நாடகாவிற்கு சென்ற வாகன ஓட்டிகளுக்கு அம்மாநில போலிசார் ரோஜா மலர் மற்றும் முகக்கவசங்களை வழங்கி பெருந்தொற்று காலங்களில் வெளியில் செல்ல வேண்டாமென விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்