பாஸ்போர்ட் இல்லை அப்புறம் உலகக்கோப்பை கோப்பை எப்படி ? - அமைச்சருக்கே விபூதி அடித்த நபர் மீது வழக்குபதிவு
தன்னை மாற்று திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் என கூறி மோசடி செய்த வினோத் பாபு மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மோசடி கிரிக்கெட்
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஆசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்கான வீல் சேர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி நடைபெற்றதாகவும் அதில் இந்திய அணியினை வழி நடத்தியதாக ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு கூறியிருந்தார்.
ஏமாந்த அமைச்சர்
ஆகவே தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் தமிழ்க முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெரும் புகைப்படங்கள் வெளியானது.
செக்வைத்த போலிசார்
இந்த நிலையில் உளவுத்துறை சந்தேகத்தின் அடிப்படையில் விநோத்பாபுவை விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அதில் அவரது கோப்பை சானிறிதழ்கள் எல்லாம் போலியானவை என்ற தகவல் வெளியானது, மேலும் தான் பாகிஸ்தான் சென்று விளையாடியதாக விநோத் பாபு கூறிய நிலையில் அவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஏ.பி.ஜே., மிஷல் பாரா ஸ்போர்ட்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சரவணக்குமார், செயலர் டேவிட் வின்சென்ட் ராஜா ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் அளித்தனர். போலி சான்றிதழ், கோப்பை தயார் செய்த வினோத் பாபு மற்றும் அவருக்கு உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், வினோத் பாபுவால் மற்ற மாற்றுதிறனாளி வீரர்களின் வாழ்வும் பாதிக்கப்படும் என்றும் கூறி புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில் தற்போது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வினோத் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan