அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்பு
எடப்பாடி பழனிசாமி- சிவி சண்முகம் மோதலால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலிஸபாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அதிமுக-வில் உட்கட்சி மோதல் வெடித்தது.
இந்த மோதல் நேற்று நடந்த சட்டப்பேரவை வாக்கெடுப்பின் போதும் பிரதிபலித்தது, தொடர்ந்து சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உட்பட பலரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அலுவலக கட்டிடத்திற்குள் எந்தவித அசம்பாவிதங்களோ அல்லது அத்துமீறல்களோ நடைபெறவில்லை என போலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
