பேரவையிலிருந்து திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றிய காவலர்கள்
சட்டப்பேரவையில் பேரவை தலைவர் இருக்கை முன்பாக அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
காவல்துறை மீட்புபணிகள் உள்ளிட்ட துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் பதிலுரையை நேற்று ஜோசப் விஜய் அளித்தார், அதில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கு பதிலளிக்க எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை, இதனால் திமுக எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று சட்டப்பேரவை தொடங்கியதும் முதலமைச்சர் நேற்று பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பேரவை தலைவர் இருக்கை முன்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபடவே, பேரவை விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்றுமாறு காவலர்களுக்கு பேரவை தலைவர் உத்தரவிட்டார், இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பானது.
