தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி - உயர்நீதிமன்றம் கேள்வி

Chennai Madras High Court
By Thahir Oct 31, 2022 11:15 AM GMT
Report

நவம்பர் 6ம் தேதி தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

ஆர்எஸ்எஸ் பேரணி 

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டிஜிபியிடம் மனு அளித்தனர்.

இந்த மனு மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஊர்வலம் நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

Police permission to hold RSS rally on November 6

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினார்.

நீதிபதி கேள்வி 

இதையடுத்து தமிழகத்தில் வருகிற நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது .

அப்போது நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அமல்படுத்தப்பட்டதா? என கேள்வி எழுப்பினார். மேலும் காவல்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.