அனுமதியின்றி நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் நடத்தியதாக அனைவரும் கைது - பரபரப்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டத்தை அனுமதியின்றி நடத்தியதாக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக சென்னை தியாகராய நகர் பென்ஸ்பார்க் ஹோட்டலில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கூட்டம்” நேற்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அங்கு கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலை கழக அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஈழத்தமிழர்கள் இணைய வழியாக பங்கேற்றனர். இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இணைய வாயிலாக இணைந்து வாழ்த்துரை வழங்கினார். பேராசியர் ராமசாமி சிறப்புரையும், பிரதமர் வி.உருத்திரகுமாரன் தலைமை உரையும் ஆற்றினர்.
இதனிடையே அங்கும் வந்த மயிலாப்பூர் காவல் உதவி ஆணையர் கூட்டத்தை நடத்த அனுமதி இல்லை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் எதிர்ப்பை மீறி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் தமிழ்தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த செந்தில் உள்ளிட்ட கூட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
![சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்](https://cdn.ibcstack.com/article/5ae555cf-86cc-4bea-a140-7c068a23059d/25-67a6422204521-sm.webp)
சீரழிக்கப்பட்டு தொடருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி : இந்தியாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் IBC Tamil
![அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம்...! சுட்டிக்காட்டும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர்](https://cdn.ibcstack.com/article/a271d428-2b27-40b4-8402-783e23a46fea/25-67a712c8ab08b-sm.webp)