பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக் - போலீஸ் மீது பட்டியலின இளைஞர் பகீர் புகார்!

Crime
By Sumathi Sep 30, 2022 03:00 PM GMT
Report

அந்தரங்க உறுப்பில் கரண்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்ததாக போலீஸ் மீது பட்டியலின இளைஞர் புகார் தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணை

பெங்களூரூவைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ஒருவரை, போலீஸார் சிறையில் வைத்து பயங்கரமாக சித்ரவதை செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில மனித உரிமைகள் ஆணையம் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகாரளித்துள்ளார்.

பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக் - போலீஸ் மீது பட்டியலின இளைஞர் பகீர் புகார்! | Police Officers Given Electric Shock Private Parts

அதில், ``செப்டம்பர் 4-ம் தேதியன்று, பெங்களூரிலுள்ள பி.நாராயணபுரா பேருந்து நிலையத்திலிருந்து என்னை 7 போலீஸார் காரில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு காவல் ஆய்வாளர் மெல்வினின் அறிவுறுத்தலின் பேரில்,

 கரண்ட் ஷாக்

அவர்கள் என்னை மாடிக்கு அழைத்துச் சென்று மரக்கட்டைகள் மற்றும் கிரிக்கெட் மட்டைகளால் தாக்கினார்கள். செப்டம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் என்னுடைய அந்தரங்க உறுப்பில் கரண்ட் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்தனர். மேலும் அவர்கள் என் கை, கால்களை மடக்கி, பூட்ஸ் காலணியால் மிதித்து, என்மீது சிறுநீரைத் தெளித்தனர்.

பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக் - போலீஸ் மீது பட்டியலின இளைஞர் பகீர் புகார்! | Police Officers Given Electric Shock Private Parts

அதோடு, சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் என் மார்பில் உட்கார்ந்துகொண்டு என் முகத்தை பூட்ஸ் காலால் தாக்கினார். அதன்பின்னர், 12 நாட்களுக்குப் பிறகு நான் விடுவிக்கப்பட்டேன், ஆனால் இந்த சித்திரவதை பற்றி ஏதாவது வெளியில் சொன்னால், பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டினர்" என்று கூறியிருக்கிறார்.

 சித்ரவதை

ஆனால், போலீஸ் தரப்பு இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து டி.சி.பி பீமாசங்கர் குலேத், கொள்ளை முயற்சி தொடர்பான வழக்கு காரணமாக தான் கைது செய்யப்படுவோம் என்று அவர் பயப்படுவதாகவும், அவரிடம் போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.