ஹுக்கா புகைக்கும் காவலர்கள்.. ரயில்வே வளாகத்தில் நடந்த பயங்கரம் - அதிர்ச்சி வீடியோ!
ரயில் நிலைய வளாகத்தில் அமர்ந்து ஹுக்கா புகைக்கும் ரயில்வே காவலரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ரயில்வே காவலர்
சென்னை சிந்தாரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலைய வளாகத்தில் அமர்ந்து சீருடையில் இருக்கும் ரயில்வே காவலர் ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹுக்கா (hookah) எனப்படும் புகையிலை சம்பந்தப்பட்ட போதை பொருட்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
இதனை ரயில் நிலையத்தில் இருந்த சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பதிவாகியுள்ள வீடியோ காட்சியில் மொத்தமாக 4 நபர்கள் ரயில் நிலைய வளாகத்தில் அமர்ந்து ஹுக்கா புகைப்பது போன்ற காட்சிகளும் அதிலும் ஒரு நபர் காவல் சீருடைகள் இருப்பதும் பதிவாகியுள்ளது. சமீப நாட்களாக ரயில் நிலையங்களில் கொலை , குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அதிர்ச்சி வீடியோ
இந்த சூழலில் சம்பந்தப்பட்ட ரயில்வே காவல்துறையினர் பணி நேரத்தில் அமர்ந்து இது போன்ற போதை வஸ்துகளில் ஈடுபடுவது ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக உள்ளது எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ரயில் நிலையங்களில் புகையிலை புகைப்பது தண்டனைக்குரிய சட்டமாக பார்க்கப்படும் நிலையில் அதனை கண்காணிக்க வேண்டிய காவல்துறையைச் சார்ந்த நபர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட இந்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடையே கோரிக்கையும் எழுந்துள்ளது.