அதுபோன்ற பிரச்சனைகளில் அவசியமின்றி தலையிடக்கூடாது - போலீசாருக்கு பறந்த உத்தரவு!

Tamil nadu Tamil Nadu Police
By Jiyath Jan 10, 2024 03:34 AM GMT
Report

சிவில் பிரச்சினைகளில் அவசியம் இன்றி போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.

ஏடிஜிபி அருண்

இது தொடர்பாக ஏடிஜிபி அருண் கூறியதாவது "எப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்த ஒரு மனுக்கள் மீதும் காவல்துறை விசாரணையும் நடத்தக் கூடாது.

அதுபோன்ற பிரச்சனைகளில் அவசியமின்றி தலையிடக்கூடாது - போலீசாருக்கு பறந்த உத்தரவு! | Police Not Interfere In Civil Matters Atgp Arun

பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை போலீசார் தவிர்க்க வேண்டும்.

நடவடிக்கை 

சிவில் விவகாரங்களில் தலையிடுவது அவசியம் என கருதினால் மாவட்ட எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

அதுபோன்ற பிரச்சனைகளில் அவசியமின்றி தலையிடக்கூடாது - போலீசாருக்கு பறந்த உத்தரவு! | Police Not Interfere In Civil Matters Atgp Arun

உரிய ஒப்புதல் இன்றி விசாரணை மேற்கொண்டால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்"என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.