அடேங்கப்பா.... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் - போலீஸ் விசாரணை
இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளைஞர் சந்தேகப்படும்படி வந்தார்.
அவரை நோட்டமிட்ட பாதுகாப்பு படை போலீசார், உடனே அவரிடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவரின் உடைமைகளை உடனடியாக சோதனை செய்த போது கட்டுக்கடாக பணம் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர், நான் நகைக்கடை கலெக்ஷன் பிரிவில் வேலை பார்க்கிறேன். இந்த பணம் அனைத்தும் நகை விற்ற கலெக்ஷன் பணம் என்று போலீசாரிடம் கூறியுள்ளார். இவர் சொல்வது உண்மைதானா என்று அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.