தமிழகத்தில் பைக் ஓட்டினால் மாதம் ரூ 1 லட்சம் சம்பளம் - வெளியான தகவலால் அதிர்ந்த போலீசார்
எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரை திடுக்கிட வைத்துள்ளது.
சென்னையில்ெனாய் நகர், வடபழனி, பெரம்பூர், ராமாபுரம், பெரியமேடு, கீழ்ப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்களில் இருந்த பணத்தை சென்சார் சிக்னலை மறைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு இந்த கொள்ளையை வடமாநில இளைஞர்கள் நடத்தியதாக சந்தேகம் எழ, தனிப்படை அமைத்து ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அர்ஷ், அவரது கூட்டாளி வீரேந்திர ராவத், நஜீம் உசேன் ஆகியோரை கைது செய்தனர். கிட்டத்தட்ட கொள்ளை போன பணம் ரூ.1 கோடிக்கும் மேல் என்பதால் கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வீரேந்திர ராவத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள தன்னை தமிழகம் வந்து பைக் ஓட்டினால் ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக தருவதாக அமீர் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமீர் கையில் பல லட்சங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்ததும் வீரேந்திர ராவத் தனக்கு அதிக பணம் வேண்டும் என கேட்டு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.