புதைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! விசாரணை தீவிரம்

Tamil nadu
By Fathima May 30, 2026 03:29 AM GMT
Report

கடலூரில் புதைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தின் வடலூர் அருகே கண்ணுதோப்பு பாலம் அருகே 38 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து அறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது, விசாரணையில் அப்பெண்ணின் பெயர் மஞ்சுளா என்பதும் வடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

புதைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! விசாரணை தீவிரம் | Police Investigate 38 Year Old Woman Death

மஞ்சுளாவின் கணவரிடம் விசாரணை நடத்தியதில், மகள் தாராஸ்ரீயை பார்ப்பதற்காக சென்னை செல்வதாக வீட்டில் கூறி சென்றதாக தெரிவித்துள்ளார்.

மகளை பார்த்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது புதன்கிழமை இரவு 11 மணிக்கு பின்னர் செல்போன் திடீரென சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது தெரியவந்ததாம், தொடர்ந்து பல இடங்களில் தேடி பார்த்தும் மஞ்சுளா கிடைக்கவில்லை என அவரது கண்ணன் தெரிவித்துள்ளார்.

அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில், மேட்டுக்குப்பத்தில் மளிகை கடை வைத்திருந்த போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் மஞ்சுளா பேசி வந்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் மேல் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார், இதனை தொடர்ந்து இளைஞருடன் தொடர்பு காரணமா என போலிசார் விசாரணையை தொடர்ந்துள்ளனர்.