தமிழ்நாட்டில் தலைதூக்கும் கள்ளசாராயம் - ராணிப்பேட்டையில் போலிசார் அதிரடி
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த எரிசாரியம் மறிமுதல்.
சோளிங்கர் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை. சோளிங்கர் அடுத்த கீழண்டைமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி.இவர் அதே பகுதியில் சட்டவிரோதமாக எரிசாராயம் விற்பனை செய்து வருவதாக சோளிங்கர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துளளது.
இதனைத் தொடர்ந்து சோளிங்கர் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர் அருன்குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்க்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது மறைவான இடத்தில் எரிசாராயத்தை மறைத்து வைத்திருந்து விற்பனை செய்துவந்த முனிசாமி என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 110- லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனா்.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் நாள் புதியதாக ராணிப்பேட்டை மாவட்டம் உதயமானது மாவட்டத்தின் முதலாவது மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளராக மயில்வாகனன் நியமிக்கப்பட்டார்.
அது முதல் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரை கூறி மறுவாழ்வு அளித்து மாற்று தொழில் செய்திட ஊக்கம் அளித்து நிதி உதவியும் பெற்று தந்தார்.
இந்நிலையில் வேறு மாவட்டத்திற்க்கு மாறுதலாகி சென்றதும் சிவக்குமார் ஐபிஎஸ் காவல் துறை கண்கானிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
அவர் பொறுப்பேற்று இருக்கையில் அமர்வதற்க்குள் மீண்டும் சட்டவிரோத செயல்கள் தலைதூக்க துவங்கிய நிலையில் சோளிங்கர் காவல் துறையினர் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி எரிசாராயத்தை பறிமுதல் செய்து சம்மந்தபட்ட நபரை கைது செய்துள்ளனர்.