காவல் ஆய்வாளரால் காப்பாற்றப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

tngovernment chennaipolice chennaiflood sirajeswari
By Petchi Avudaiappan Nov 12, 2021 07:32 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மயங்கி கிடந்த நபரை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று கரையை கடந்த நிலையில் சென்னையில் கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. அதேசமயம் பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்தன. கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களை மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் மயங்கி நிலையில் உதயா என்ற இளைஞர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இறந்துவிட்டார் என்று நினைத்த நிலையில் அவர் உயிருடன் இருந்ததால் உடனடியாக அவரை தோளில் சுமந்து சென்று டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தார். 

இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது. குறிப்பாக காவல் ஆய்வாளரின் கடமையை முதல்வர் மு.க.ஸ்டாலின், டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.  இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உதயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.