வீட்டில் பிரிட்ஜ் வெடித்து காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
மகனை காணச்சென்ற காவல் ஆய்வாளர் பிரிட்ஜ் வெடித்ததில் பரிதாபமாக பலியாகினார்.
காவல் ஆய்வாளர் உயிரிழப்பு
சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சபரிநாத்.
இவர் விடுதியில் தங்கி பயின்று வரும் தனது மகனை காண்பதற்காக விடுப்பு எடுத்து சொந்த ஊர் சென்று இருந்தார்.
இந்த சமயத்தில் காலை நேரத்தில் அவர் வீட்டில் இருக்கையில், சமையல் செய்வதற்காக சாந்தி என்ற பெண் வந்துள்ளார்.
அப்போது பயங்கர சத்தம் கேட்ட நிலையில், அங்கு இருந்தவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் தீயில் எரிந்து கருகுவது போன்ற காட்சிகள் இருந்துள்ளன.
இதனையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு இருவரையும் பிரேதமாக மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் பிரிட்ஜ் வெடித்தது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.