காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் - அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்...!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றிய காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறபித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 2011, 2012 ஆம் ஆண்டு காவல் ஆய்வாளராக இருந்தவர் சிவசங்கரன்.
இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள வேல்குறிச்சி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2011, 2012 ஆம் ஆண்டு தனியார் பள்ளி நிலம் சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கு மோசடி ஒன்றில் சாட்சி சொல்ல பல முறை சம்மன் அனுப்பியும் சம்மனை வாங்க மறுத்ததாலும்,
மேலும் சாட்சி சொல்ல நீதிமன்றதிற்க்கு வராத நிலையில் காவல் ஆய்வாளர் சிவசங்கரனுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நடுவர் எண் 2 நீதிமன்ற நீதிபதி பரம்வீர் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறபித்தது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது...

Optical illusion: படத்தில் நீங்கள் முதலில் பார்ப்பது கோளமென்றால்... நீங்கள் இப்படிப்பட்டவரா? Manithan
