மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்த கஞ்சா - 2100 கிலோ பறிமுதல்!
தூத்துக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிலோகணக்கிலான கஞ்சாவை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
போதை பொருட்கள்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தல் நடக்கிறது.
அதனை தடுப்பதற்காக 'ஆபரேஷன் கஞ்சா' என்ற திட்டத்தில் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவதோடு விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கஞ்சா பறிமுதல்
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு தோட்டத்தில் 2100 கிலோ கஞ்சாவை மதுரை போலீஸார் நேற்று நள்ளிரவு பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை கீரைத்துறை காவல் நிலைய பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை கீரைத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்த போது கஞ்சாவை தூத்துக்குடியை சேர்ந்த ஆரோன் என்பவரிடம் வாங்கியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மதுரை கீரைத்துறை போலீஸாரை தூத்துக்குடியை சேர்ந்த ஆரோன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது சாத்தான்குளம் அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, போலீசார் அந்த இடத்திற்கு சென்று மொத்தம் 2100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அங்கு இது தொடர்பான 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவை படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.