மனைவி மீது சந்தேகம்...பச்ச உடம்பு என்று கூட பார்க்காமல் படுகொலை செய்த கணவர்

Attempted Murder Karnataka
By Thahir Nov 09, 2023 11:35 PM GMT
Report

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த போலீஸ்கார கணவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் மனைவி இடையே வாக்குவாதம்

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் வீரப்புரா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 32). இவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில், பிரதீபா (வயது 23) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

Police husband who killed his wife

கிஷோர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பிரதீபா கணினி அறிவியல் படித்துள்ளார். பிரசவத்திற்காக தாய் வீட்டில் இருந்த பிரதீபாவுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மாலை கிஷோர் மற்றும் பிரதீபா இடையே நடந்த உரையாடலில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதில், புதிதாக தாயான பிரதீபா ஒரு கட்டத்தில் அழுது புலம்பியிருக்கிறார்.

இதனால், தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டு, கிஷோருடன் பேசாமல் இருக்கும்படி பிரதீபாவின் தாயார் கூறியிருக்கிறார். கடந்த திங்கட்கிழமை மொபைல் போனை பிரதீபா பார்த்தபோது, அதில் 150 மிஸ்டு கால்கள் இருந்துள்ளன. 

படுகொலை 

பின்னர், மனைவி வீட்டுக்கு வந்த கிஷோர், அறையொன்றை பூட்டி விட்டு, மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரத்தில் பிரதீபாவை கொன்று விட்டார். 

செல்லும் முன்பு, கொன்று விட்டேன், அவளை கொன்று விட்டேன் என பிரதீபாவின் தாயாரிடம் கூறி விட்டு கிஷோர் தப்பியுள்ளார். 

இந்த விவகாரத்தில், மனைவிக்கு மற்றொரு நபருடன் தொடர்பு உள்ளது என கிஷோர் சந்தேகித்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்திய போலீசார் கிஷோரை கைது செய்தனர். அவர் பிரதீபாவை கொல்வதற்கு முன், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.