மனைவியை அடிச்சு கையே வலிக்குது; ஒருமாதிரி ஆகிட்டா - போலீஸ் அதிகாரியின் பகீர் ஆடியோ!
மனைவியை அடித்து கை வலிப்பதாக, தனது தங்கையிடம் பேசிய காவலரின் ஆடியோ வெளியாகியுள்ளது.
வரதட்சணை கொடுமை
மதுரையைச் சேர்ந்தவர் பூபாலன். மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றுகிறார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பூபாலனின் தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
காவலர் கைது
இருவரும், திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணத்துடன் கூடவே, மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி தர வேண்டும், நகை கூடுதலாக வேண்டும் என மனைவியை கொடுமை செய்துள்ளனர்.
மேலும் தன் தங்கையிடம் தன் மனைவியை எவ்வாறு கொடுமைப்படுத்தினேன் என்பதை பூபாலன் தொலைபேசி வாயிலாக எடுத்துரைத்திருக்கிறார். அதில் மனைவியை அடித்து அடித்து கை வலிப்பதாகவும், ஒருமாதிரி ஆகிட்டா எனவும் கூறுகிறார். இதனை கேட்ட தங்கை சிரிக்கிறார்.
இந்த ஆடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியை, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருகிறார்.
இதனையடுத்து பூபாலன், தந்தை செந்தில் குமார், தாய் விஜயா மற்றும் தங்கை அனிதா ஆகியோர் மீது நான்கு பிரிவுகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.