காவல்துறை அதிகாரிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

police stalin
By Irumporai May 26, 2021 01:17 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ளபோதும் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் பொதுமக்கள் சுற்றி வருகின்றனர்.

தேவையின்றி வருபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தும், வழக்குப்பதிவு செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு சிறப்பாக அமல்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரியுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டுள்ளனர்.