பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக போலீஸ் அதிகாரி

sexualabuse பாலியல் வன்கொடுமை
By Petchi Avudaiappan Jan 05, 2022 11:32 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

ஈரோட்டில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியை சேர்ந்த செல்வன்(32) என்பவர் காவல்துறையில் ஏட்டாக பணிபுகிறார். இவர் சேலம் புறநகர் காவல் துணை கண்காணிப்பாளரின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஈரோடு ரயில்வே காவல்துறையில் போலீஸாக பணிபுரிந்து வருகிறார்.

இதனால் செல்வன் வீட்டுக்கு வந்து செல்கையில் அடிக்கடி ஈரோடு ரயில் நிலையத்தில் பணிபுரியும் தனது மனைவியை நேரில் பார்த்து செல்வார். அப்போது, தன் மனைவியுடன் பணிபுரியும் 29 வயது சக பெண் காவலரிடம் நட்பாக பழகியதாக கூறப்படுகிறது.

அந்த பெண் காவலருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு செல்வன் அந்த பெண் காவலரின் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு தனியாக இருந்த பெண் காவலரை, பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 

ர் செல்வன் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்த பெண் காவலர் உதவி கேட்டு சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து செல்வன் தப்பியோடியுள்ளார். பின் பாதிக்கப்பட்ட பெண் காவலர் சூரம்பட்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் விஜயா, செல்வன் மீது வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணிடம் தவறாக நடக்க முயற்ச்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி சிறையில் அடைத்தனர்.

இந்த க சம்பவம் காவல்துறை மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.