இரு பிரிவினரிடையே மோதல் - 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அம்பாசமுத்திரம், ஊா்க்காடு - சாட்டுபத்து சாலையில் ஊா்க்காட்டைச் சோ்ந்த இளைஞா்கள் அமா்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக குளித்துவிட்டு வந்த மற்றொரு பிரிவினா் அங்கிருந்த இளைஞா்களின் மோட்டாா் பைக் மீது மோதியதில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இரு பிரிவினரும் வீடுகள் மீது தாக்குதலில் ஈடுபட்டனா். தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.