பீஸ் பீஸா ஆக்கிடுவேன்; பிரதமர் மோடிக்கு மிரட்டல் - அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோடிக்கு மிரட்டல்
முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தாமோ அன்பரசன். சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, திமுக விரைவில் காணாமல் போகும் எனப் பேசியிரிந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் தாமோ அன்பரசன், ‛‛எவ்வளவோ பிரதமரை நான் பார்த்துள்ளேன். ஆனால் இவ்வளவு மட்டமாக பேசிய பிரதமரை நான் பார்த்து இல்லை. ஒழிச்சிடுவேன் என்று சொல்கிறார். நான் ஒன்றை ஒன்றை சொல்லி கொள்கிறேன்.
அமைச்சர் மீது வழக்குப்பதிவு
திமுக என்பது சாதாரண இயக்கம் இல்லை. பல பேர் உயிர் தியாகம் செய்து வளர்ந்த இயக்கம். யார் யாரோ ஒழிஞ்சிவிடும் என கூறினார்கள். ஆனால் அவர்கள் தான் ஒழிந்துபோய்விட்டனர். இந்த இயக்கம் அப்படியே தான் உள்ளது. நான் அமைச்சர் என்பதால் அடக்கி வாசிக்கிறேன்.
இல்லாவிட்டால் பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்'' எனக் கூறியிருந்தார். இவரது பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இவரது வீடியோ பரவி வைரலான நிலையில், பிரதமர் மோடிக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் கொலை மிரட்டல் விடுத்ததாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சய்சய் ரஞ்சன் சார்பில் டெல்லி போலீசில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், அமைச்சர் மீது கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,