பெட்ரோல் குண்டு வீச்சு: காவல் துறை புகாரை பதிவு செய்யவில்லை - ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு!

Tamil nadu Governor of Tamil Nadu
By Jiyath Oct 26, 2023 10:30 AM GMT
Report

பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் மெயின் கேட் முன்பு தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கருக்கா வினோத் என்பவர் நேற்று பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு: காவல் துறை புகாரை பதிவு செய்யவில்லை - ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு! | Police Did Not File Complaint Governor Alleges

அவரிடம் இருந்து மேலும் இரண்டு பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆளுநர் மாளிகை புகார் அளிக்கப்பட்டது. அதில் 'திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மூலம் ஆளுநருக்கு தொடர் அச்சுறுத்தல் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது கான்வாய் தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆளுநர் மாளிகை அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது "காவல் துறைக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான வன்முறையாக இருந்தாலும், அது கண்டிக்கத்தக்கது. திமுக அரசு இதை சும்மா விடாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

புகார் பதிவு செய்ய வில்லை

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை புகாரை பதிவு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை.

பெட்ரோல் குண்டு வீச்சு: காவல் துறை புகாரை பதிவு செய்யவில்லை - ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு! | Police Did Not File Complaint Governor Alleges

தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.