அடுத்தடுத்து முதல்வரை சந்தித்த முன்னாள், இந்நாள் டிஜிபிக்கள் - என்ன காரணம் தெரியுமா?

Mk stalin DGP sylendra babu ips Former DGP JK tripathy
By Petchi Avudaiappan Jun 30, 2021 02:31 PM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள், இந்நாள் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பிக்கள் சந்தித்தனர். 

தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பியாக பதவி வகித்து வந்த ஜே.கே. திரிபாதி இன்று ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

அடுத்தடுத்து முதல்வரை சந்தித்த முன்னாள், இந்நாள் டிஜிபிக்கள் - என்ன காரணம் தெரியுமா? | Police Dgp Sailendra Babu Meets Mkstalin Today

இதனிடையே  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சைலேந்திரபாபு சந்தித்து டிஜிபியாக பதவி ஏற்றதற்கு  வாழ்த்து பெற்றார்.

அதேபோல் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஜே.கே.திரிபாதியும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.