செவிலியரிடம் தகராறு செய்த போலீசார்...
ஆந்திராவில் பெண் செவிலியரிடம் போலீசார் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செவிலியராக பணிபுரிபவர் லக்ஷ்மி அபர்ணா. இவர் நேற்று பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரால் இவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அவர்களிடம் தான் தனியார் மருத்துவமனையில் முன் களப்பணியாளராக வேலை செய்து கொண்டிருப்பதாகவும், அதற்கான அனுமதி சீட்டையும் லட்சுமி அபர்ணா கொடுத்துள்ளார்.

ஆனாலும் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த செவிலியர் அபர்ணா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் வாகனத்தை கைப்பற்றியதோடு செவிலியருடன் வந்த உறவினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.இதனைத் தொடர்ந்து சாலையில் அமர்ந்து லட்சுமி அபர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனைஅடுத்து போராட்டம் நடத்திய செவிலியர் லட்சுமி அபர்ணாவை போலீசார் காவல் நிலையத்திற்கு இழுத்து சென்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பாக நடந்தேறிய லங்காசிறியின் “நம்மவர் பொங்கல்”: ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! IBC Tamil
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan