எய்ம்ஸ் பற்றி தவறான கருத்து..பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது காவல் நிலையத்தில் புகார்

Indian National Congress BJP
By Thahir Sep 30, 2022 09:33 AM GMT
Report

எய்ம்ஸ் குறித்து தவறான கருத்து தெரிவித்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தவறான கருத்து கூறிய ஜே.பி.நட்டா

பாரதீய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அண்மையில் தமிழகம் வந்திருந்தார். அப்போது மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசுகையில், ‘ மதுரை எய்ம்ஸ் கட்டடத்தின் 95 சதவீத பணிகள் நிறைவடைந்தது.’ என கூறினார்.

எய்ம்ஸ் பற்றி தவறான கருத்து..பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது காவல் நிலையத்தில் புகார் | Police Complaint Against Jp Natta

பாஜக தலைவரின் இந்த கூற்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முதற்கட்ட 95 சதேவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.

அதனை தான் ஜே.பி.நட்டா கூறினார் என பாஜகவினர் அதற்கு விளக்கம் தெரிவித்தும் வந்தனர். இருந்தும் இந்த ’95 சதவீத எய்ம்ஸ்’ சர்ச்சை முடிந்தபாடில்லை.

காவல்நிலையத்தில் புகார் 

தற்போது மதுரை ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் பற்றி தவறான கருத்து கூறிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

எய்ம்ஸ் பற்றி தவறான கருத்து..பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மீது காவல் நிலையத்தில் புகார் | Police Complaint Against Jp Natta

எய்ம்ஸ் பற்றி மத்திய சுகாதாரத்துறையோ அல்லது எய்ம்ஸ் நிர்வாகம் தான் கருத்து கூறவேண்டும். ஒரு கட்சி தலைவர் இதனை கூறுவது ஏற்புடையது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புகாரை, மதுரை காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவினை சேர்ந்தவர்கள் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் கூறியுள்ளனர்.